என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உத்தர பிரதேசம்
நீங்கள் தேடியது "உத்தர பிரதேசம்"
உத்தர பிரதேசம் மாநிலத்தில் செல்பி மோகத்தால், 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீரட்:
உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள லிசாரி கேட் பகுதியை சேர்ந்த சிறுவன் உவைஷ் அகமத் (14). சிறுவன் நிஜ துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து சுடும் வகையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது, திடீரென துப்பாக்கி டிரிக்கரை அழுத்தியதில் புல்லட் பாய்ந்து சிறுவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கூறியதாவது:-
உவைஷ் செல்பி எடுக்கும்போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். உவைஷின் மூத்த சகோதரர் சுஹையில் திருட்டு வழக்கில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டவன். மேலும், நிறைய வழக்குகளும் சுஹையில் மீது உள்ளன.
அதனால், சம்பந்தப்பட்ட துப்பாக்கி சுஹையிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் துப்பாக்கி குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்." என்று அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. செல்பி மோகத்தால் பறிபோன ஐ.ஐ.டி. மாணவி உயிர்: ஆற்றில் மூழ்கி பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்த மெகா கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
லக்னோ:
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின்படி, பாஜக 48 இடங்களில் முன்னிலை வகித்தது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி பின்தங்கியது. மெகா கூட்டணி 14 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.
நேரம் செல்லச் செல்ல பாஜக முன்னிலை பெற்ற தொகுதிகள் அதிகரித்தன. மதிய நிலவரப்படி 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது. 19 தொகுதிகளில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 55 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பின்னடவை சந்தித்துள்ளார். அமேதியில் ஸ்மிரிதி இரானி முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்ததால், கடும் போட்டி நிலவுகிறது.
ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதேபோல் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் (லக்னோ), மேனகா காந்தி (சுல்தான்பூர்), சந்தோஷ் காங்வார் (பரேலி) ஆகியோரும் முன்னிலை பெற்றிருந்தனர். சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் (மெயின்புரி), அவரது மகன் அகிலேஷ் யாதவ் (ஆசம்கர்), அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் (கன்னாஜ்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 2014 பொதுத்தேர்தலில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச அமைச்சரவையில் இருந்து சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ராஜ்பர் நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரையின்படி கவர்னர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. அந்த கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில எம்எல்ஏக்கள் இணை அமைச்சர்களாக பொறுப்பில் இருந்தனர்.
இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபகாலமாக பாஜகவை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என சமீத்தில் பேசினார். அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் கூறி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பரை தனது அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பரிந்துரை செய்தார். இதேபோல் இணை அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளில் இருக்கும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் உடனடியாக நீக்க பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை கவர்னர் ராம் நாயக் ஏற்றுக்கொண்டு, ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதேபோல் அக்கட்சியின் பிற உறுப்பினர்களும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #UPBusAccident #BusOverturned
மெயின்புரி:
பேருந்திற்குள் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள், தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் மற்றும் போலீசார் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #UPBusAccident #BusOverturned
உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை தனியார் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற அந்த பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #UPBusAccident #BusOverturned
4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கியது. #KairanaBypoll #Election
புதுடெல்லி:
உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதேபோன்று மகாராஷ்டிராவின் பந்த்ரா-கோண்டியா மற்றும் பால்கர் என இரு நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் நாகலாந்தில் ஒரு தொகுதி ஆகியவற்றிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதேபோன்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான ஹுகும் சிங் மரணம் அடைந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கு முன் கோரக்பூர் மற்றும் பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது. இதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் கைரானா தொகுதிக்கான தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஒரு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், 4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. #KairanaBypoll #Election

இதில் சிங்கின் மகள் மிருகங்கா சிங் அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ராஷ்டீரிய லோக் தள கட்சியின் தபசும் ஹசன் நிறுத்தப்பட்டு உள்ளார். ஹசனுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இதற்கு முன் கோரக்பூர் மற்றும் பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது. இதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் கைரானா தொகுதிக்கான தேர்தல் ஆளுங்கட்சிக்கு ஒரு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், 4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. #KairanaBypoll #Election
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விஷத்தன்மை மிக்க பாம்பு கடித்தது தெரியாமல் தாய்ப்பால் கொடுத்த பெண்ணும், குடித்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். #girldeath
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர் மாவட்டத்தில் உள்ள மன்ட்லா கிராமத்தை சேர்ந்த பெண் தனது இரண்டரை வயது குழந்தையுடன் நேற்றிரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அவரை விஷத்தன்மை மிக்க பாம்பு கடித்துள்ளது. இதை அறியாமல் தூங்கிய அவர் குழந்தை அழுததால் அதற்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
சற்று நேரத்தில் இருவரும் மூச்சுத்திணறலுடன் மயங்கி விழுந்தனர். உறவினர்கள் அவர்களை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிகிச்சை பலனின்றி முதலில் குழந்தையும், பின்னர் தாயும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். #tamilnews #girldeath
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் மழையில் நேற்று மின்னல் தாக்கியதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. #Lightning #Fire
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இந்த மாநிலத்தில் புழுதி புயலும் பலமாக தாக்கியது. இந்த புழுதி புயலில் சிக்கி 18 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், உ.பி.யின் சம்பால் நகரில் நேற்று இரவு ராஜ்புரா பகுதியில் மின்னல் தாக்கியது.
இதில் அந்த பகுதியில் உள்ள 100க்கு மேற்பட்ட குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்தது.
தகவலறிந்து அங்கு மூன்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. அவர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். #Lightning #Fire
டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் பலத்த மழைக்கு 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #Duststorm
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் இன்று உக்கிரமான வெயில் தாக்கியது. ஆனால் மாலையில் வானிலை முற்றிலுமாக மாறியது.
மாலையில் மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய புழுதி புயலுக்கு 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.
புழுதி புயல் தாக்கியதில் தலைநகர் டெல்லியில் 2 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். பலத்த காற்று வீசியதில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
இதேபோல், மேற்கு வங்காளத்தில் பெய்து வரும் மழையில் மின்னல் தாக்கியதில் 8 பேர் இறந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Duststorm #tamilnews
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் புயல் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UP #Thunderstorm
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் பல மாவட்டங்களில் முன் எச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
உ.பி.யின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த பலத்த மழைக்கு 9 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் இடாவா நகரில் 5 பேர், மதுரா, அலிகார், ஆக்ராவில் தலா 3 பேர், பிரோசாபாத்தில் 2 பேர், ஹத்ராஸ் மற்றும் கான்பூரில் தலா ஒருவர் என மொத்தம் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும், இந்த மழைக்கு சிக்கி 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்தனர்.
மதுராவில் புயல் மழையில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்த துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா, புயலில் சிக்கி பலியானவர்க்ள் குடும்பத்தினருக்கு க் ல்யானபள் தலா 4 லட்சம் ரூபாய் வ்ழங்கப்ப்டும் என அறிவித்துள்ளார். மேலும், மழையில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, உ.பி.யில் மீண்டும் புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆஅய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #UP #Thunderstorm
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UP #Thunderstorm
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உபியின் மேற்கு பகுதியில் உள்ள ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த பலத்த மழைக்கு 9 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் பல்வேறு நகரங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதுராவில் இடி தாக்கியதில் 3 பேரும், ஆக்ராவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒருவரும், இடாவா நகரில் 4 பேர் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மழையில் சிக்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UP #Thunderstorm
×

X